கும்பகோணத்தை அடுத்து கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக புத்தக நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சீ.பொ. மாணிக்கவாசுகி அவர்கள் தலைமை ஏற்றார். இந்நிகழ்விற்கு அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகர் நி.தங்கபாண்டியன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழ் த்துறை பேராசிரியர் முனைவர் இரா. கலையரசி அவர்களும் கணிதத் துறை பேராசிரியர் ஆர்.வினிதா அவர்களும் வினாடி-வினா போட்டி நடத்தினர். மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது. அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் சி.இளஞ்செழியன் அவர்கள் வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டுகளை வழங்கினார். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நூல்கள் துணையாக நிற்கும் என்று கூறி உலக புத்தக நாள் விழா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
துணை முதல்வர் பேராசிரியர் க.ராஜா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியாக துணை நூலகர் செந்தில்குமார் அவர்கள் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை நூலகர் சித்ரா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்