![]() Dr. J. LOYOLA PEERIS, (Tamil) MA, MPhil, Ph.D., Associate Professor |
![]() Dr. S. ATHISAKTHI, (Tamil) MA.,MA.(Ling), MPhil, Ph.D., BE.d.,NET., Associate Professor |
![]() Dr. R. KALAIYARASI, (Tamil) MA, MPhil, BEd., Ph.D., SET., Associate Professor View Profile |
![]() Dr. P. NIRMALA, (Tamil) MA, MPhil, Ph.D., Assistant Professor |
![]() Dr P. SANTHI, (Tamil) TPT., MA, MPhil, Ph.D., Assistant Professor |
![]() Dr. B. JENIFARANI, (Tamil) MA, MPhil, Ph.D., Assistant Professor |
![]() Dr. D. ELANGESWARI, (Tamil) MA, MPhil, Ph.D., Assistant Professor |
![]() Mrs. S. VIJAYALAKSHMI, (Tamil) MA, Bed., MPhil., Assistant Professor |
![]() Mrs. J. VIMALA, (Tamil) MA, MPhil., Assistant Professor |
![]() Mrs. A. PRATHIBA NIVANCHELIN, (Tamil) BLit., TPT., MA, MPhil., Assistant Professor |
||
![]() Dr M. Pugazhanthi, (Tamil) MA, MPhil, B.Ed., Ph.D., NET Assistant Professor |
![]() Dr M. SENTHILKUMAR, (Tamil) MA, M.Phil., B.Ed., Ph.D., Assistant Professor |
![]() Mr. S. SOMASUNDARAM, (Tamil) MA, M.Phil, B.Ed., (Ph.D.,) SET., Assistant Professor |
![]() Dr. S. JEGAN ANDOTHILAK, (Tamil) MA, M.Phil, Ph.D., Assistant Professor |
![]() Mr. V. THIRUMURUGAN, (Tamil) MA, MPhil., Assistant Professor |
![]() Dr R. SENTHIL, (Tamil) MA, MPhil, Ph.D., NET., Associate Professor View Profile |
![]() Dr. S. ANBUCHEZHIYAN, (Tamil) MA, MPhil, Ph.D., Assistant Professor View Profile |
![]() Dr N. AIYYAMPERUMAL, (Tamil) MA, MPhil, Ph.D., Assistant Professor View Profile |
B.Lit.,Tamil
Department Staff Details:
About the Department
அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையானது 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்று இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வுடன் இன்றுவரை சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. முனைவர் பட்ட ஆய்வு 2015 ஆம் ஆண்டிலும், முதுகலை பட்டம் 2020 ஆம் ஆண்டிலும் தொடங்கப்பட்டு தமிழ்துறையானது தமிழ்உயராய்வு மையமாக வளம் கண்டுள்ளது. இத்தமிழ் உயராய்வுத்துறையானது எட்டு முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களையும், பல்கலைக்கழக தேசியத்தர மதிப்பீட்டில் (NET) தேர்ச்சிப்பெற்ற பேராசிரியர் ஒருவரையும், பல்கலைக்கழக மானியக்குழு தமிழ்நாடு அளவில் நடத்தும் பேராசிரியர்களுக்கான தரமதிப்பீட்டில் (SET) தேர்ச்சி பெற்ற மூன்று பேராசிரியர்களையும் கொண்டுள்ளது.
கற்றல் கற்பித்தல் செயல்பாட்டின் மூலம் வளர்க்கப்படும் படைப்பு மற்றும் வாழ்க்கைத் திறன்கள் பாடத்தின் பயன்பாட்டின் நோக்கத்தை விரிவுபடுத்துகின்றன. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்ச்சி விகிதத்தில் 100 சதவிகிதமும் தரவரிசைப்பட்டியலிலும் இடம்பெற்று வருகிறது.
கவியரசர் தமிழ்ச்சங்கம் சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ் உயராய்வுத்துறை பேராசிரியர் முனைவர் சா.ஜெகன் அண்டோ திலக் அவர்கள் கவிஞானி விருதும், குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச்சங்கம் கார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற கலை இலக்கிய போட்டியில் நூற்றுக்கும் மேலான மாணவர்களை கலந்து கொள்ள ஆர்வமூட்டி ஒருங்கிணைத்த கல்வித் தொண்டினைப் பாராட்டி சாதனைச் செம்மல் விருதினையும் பெற்றுள்ளார்.
மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்ற நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழாவில் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் உயராய்வுத்துறைப் பேராசிரியர்களான முனைவர் ஜே.லொயோலாபீரிஸ், பேரா.மா.புகழேந்தி, பேரா.சு.சோமசுந்தரம், முனைவர் இரா.தமிழ்ச்செல்வி மற்றும் முனைவர் இரா.கலையரசி ஆகிய ஐந்து பேரின் கல்விப் பணியையும் சமூகப் பணியினையும் பாhராட்டி பேராசிரியர் பெருந்தகை மற்றும் பேராசிரியர் சிகரம் விருதினைப் வழங்கியுள்ளனர். மேலும் எம்துறை பேராசிரியர்கள் பன்னாட்டு ஆய்வு இதழ்களிலும், பன்னாட்டு மற்றும் தேசிய கருத்தரங்களிலும் தம் ஆய்வுக் கட்டுரைகளை திறம்பட வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ் உயராய்வுத்துறை மாணவர்களின் ஆய்வுத் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் இருந்து தலைப்புகள் கொடுக்கப்பட்டு அதனை திறனாய்வு செய்யும் வகையில் வாரந்தோறும் ஆய்வாளர் பூங்கா என்ற திறனாய்வுக் கருத்தரங்கம் செயல்பட்டு வருகின்றது.
“படைப்புகள் திறனாயப்படும் திறனாய்வுகள் படைக்கப்படும்” என்னும் நோக்கத்தோடு மாதந்தோறும் ‘வளர்பிறை முற்றம்’ என்ற திறனாய்வுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களின் பன்முகச் சிந்தனையை வெளிக்கொணரும் வகையில் மாதம் இருமுறை வேள்வி இலக்கிய வட்டம் சார்பாக பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி, நாடகப்போட்டி, பட்டி மன்றம், வழக்காடு மன்றம் மற்றும் வார்த்தை விளையாட்டு போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.
கல்லூரி மாணவர்களின் கிறுக்கல்களை கவிதையாக்கும் முனைப்போடு கவித்திறனை மேம்படுத்துவதற்காக தமிழ் உயராய்வுத்துறை சார்பில் மாதந்தோறும் பைந்தமிழ்க் கவியரங்கம் என்ற அமைப்பின் மூலம் கவிதைப்போட்டி நடத்தப்பெற்று வெற்றிபெறுவோர்க்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு புதிய சிந்தனையைத் தூண்டும் வகையில் வியாழக்கிழமை தோறும் சிந்தனையாளர் மன்றம் நடத்தப்பட்டும் அம்மன்றத்தில் மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் கருத்துரைகளை வழங்குவார்கள்.
பள்ளி மாணவர்களின் நுண்ணறிவுத் திறனை மேம்படுத்துவதற்காக மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சுழல்கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் விழாவாக தமிழ் உயராய்வுத்துறை கொண்டாடி வருகிறது. .மேலும், எம் பேராசிரியர்கள் நாட்டு நலப்பணித்திட்டம், ரோட்ராக்ட் கிளப், லியோ கிளப், மகளிர் மேம்பாட்டு சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களில் ஒருங்கிணைப்பாளராக செயலாற்றி வருகின்றனர்.
தமிழ்உயராய்வுத்துறை சார்பாக பருவத்திற்கு இரண்டு கருத்தரங்கங்கள் என்பதன் அடிப்படையில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
மாதம் இருமுறை பேராசிரியர்களுக்கான ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி (FDP) அளிக்கப்படுகிறது.
தமிழ்உயராய்வுத்துறை பேராசிரியர் முனைவர் ஜே.லெயோலாபீரிஸ் மற்றும் பேராசிரியர் சு.சோமசுந்தரம் ஆகிய இருவரும் ஒவ்வொரு வருடமும் பதினைந்திற்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குச் சென்று அங்கு பயிலும் மாணவர்களுக்கு மேற்படிபிற்கான வாழ்க்கை வழிகாட்டல் நிகழ்ச்சியை(Career Guidence) நடத்தி வருகின்றனர்.
முதுகலைத்தமிழ்
அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் உயராய்வுத்துறை முதுகலைப் பிரிவானது 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர்.தமிழ் உயராய்வுத்துறையில் பல அமைப்புகள் வழியாக முதுகலை தமிழ் இலக்கிய மாணவர்களின் ஆளுமைத் திறனையும், ஆய்வுத் திறனையும் வெளிக்கொண்டுவர வழி வகை செய்கிறது.
முனைவர்பட்ட ஆய்வு
அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வானது 2015 ஆம் ஆண்டு சனவரியில் தொடங்கப்பட்டு இரண்டு ஆய்வு நெறியாளர்களோடும் ஆய்வு மாணவர்களோடும் செயல்பட்டு வருகிறது. முதல் ஆய்வு மாணவரான மா.செந்தில்குமார் அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது முனைவர்பட்ட பொது வாய்மொழித் தேர்வினை நடத்தி முனைவர் பட்டம் பெறுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார் என்பதை மகிழ்வோடு தொரிவித்துக்கொள்கிறோம். முனைவர் பட்ட ஆய்வாளர்கள் தகுதி வாய்ந்த பேராசிரியர்களாக தங்களை உருவாக்கிக்கொள்ளும் வகையில் இளங்கலை மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆய்வாளர்கள் தங்களுக்கு எழும் ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளவும், புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும் கல்லூரி அல்லாது தமிழ்த்துறையில் ஆயிரம் நூல்களைக் கொண்ட நூலகம் செயல்பட்டு வருகிறது.
Vision
- To Makes students understand the speciality and Individuality tamil literature.
- To include the cultural heritage of ancient tamil society
- To senstize the student community towards the tamil society
- To encourage the creation of new tamil literature
- To create an environment of learning tamil with scientific bias
Mission
- To encourage comparative learning of tamil with other literature
- To create platform for new strategy in creating tamil literature
- To motivate the translation of tamil literature in other language
Research Programme
- To sharpen their critical ability to interpret and evaluate literary texts and theories.